Saturday, 12 January 2013

காத்திருக்கிறேன் உனக்காக...

செல்லமாய் அடித்த அடிகள்
போட்ட சண்டைகள்
காட்டிய கோபங்கள்
விலகிச் சென்ற நேரங்கள்
இதையெல்லாம் தாண்டி...

எனக்கு மட்டுமேயான‌
நெருக்கமான தருணங்கள்
அன்பின் வார்த்தைகள்
காட்டிய பரிவுகள்
சிலதாயினும்...

எதையும் மறக்கவில்லை நான்
மறக்கவும் முடியாதவை அவை

காத்திருக்கிறேன் உனக்காக...
உன் வரவுக்காக‌...
எப்போதும்

No comments: