Saturday 20 July 2013

கல்கியில் பிரசுரமான என் முதல் கவிதை... 


நீயாகத்தான் வாழ்ந்தேன்..

என்னை விட்டு 
உன்னிடம் வந்த நான்
என்னில் இருக்கும் போதும் 
நீயாகத்தான் வாழ்ந்தேன்... 
உன்னைச் சேர்ந்த போது 
தான் தெரிந்து கொண்டேன்... 
நேர்த்தியாய்ச் 
சொல்லப்படுவதில் 
ஜெயிக்கத் தொட‌ங்குகிறது 
நம் எண்ணங்கள்..



ஜூலியட்




Tuesday 19 February 2013

உன்னுள் துளைக்கவா 
என் காற்றை 
வருடும் உன் விரலால்
கண்கள் 
எட்டும் தூரம் தான் 
நீ இருப்பது..! 
என் விரல் கூட 
தொட முடியல..!

காரணங்கள் தெரியப்படவே
...........பேசினேன்
பிழையிருப்பின்
என் தவறை மன்னித்து 
ஏற்கவும்..!

Monday 18 February 2013

அழைத்தேன் உன்னை
ஆவலாய்.. 
வாய்ப்பளிக்கவில்லை
எனக்கு உன்
விருப்பமற்று
பேசியதால்..
நன்றி என் அழைப்பை
ஏற்றதற்கு..

ஏமாந்து தான் 
போனேன் நான் 
உன் அன்பால்..

நிதானித்த அந்த 
நொடிகள் 
ஆயிரம் வார்த்தைகள் 
பேசப்பட்டன‌


எங்களை இணைத்த பாடல் இது

இதயம் ஒரு கோயில் அதில்
உதயம் ஒரு பாடல் இதில்
நான் உன் ஜீவனே
இசையை மலராய் 
நாளும் சூட்டுவேன்...
(இதயகோயில்)




தோல்விகளை 
ஏற்கும் பக்குவம் 
மனதுக்குத் தெரியவில்லை..
நீ சாய்ந்த தோளை 
நான் சாய்த்து 
உறங்கினேன்

உன் கனவைக்
கலைக்க‌
மனமின்றி..

ஒருவர் நம்மை 
சபித்தால்.. 
அந்த சாபம் 
அப்படியே.. 
நம்மை வந்து 
சேராது; 
நாம் சரியாக 
இருக்கும் போது...
உன்னைப் பிடிக்க 
ஆசை பிடித்துக் 
கட்டவில்லை நானும் 
எட்டி நின்று 
பார்த்த.. 
உன்னைக் கொண்டு 
சென்றது காற்று..



காதில் சொன்னேன் ரகசியம்
மூச்சுக் காற்றின் வெப்பத்தில் 
ஸ்லாகித்தேன் நான்...

நிறைவுகள் 
நிறைந்திருக்கும் 
எப்பொழுதும்..!

குறைவுகள் 
நிறைகளாகும் 
எப்பொழுது..!

ஒரு உண்மையான அன்பை
எவ்வளவு தான் 
காய படுத்தினாலும்
அது மறுபடியும் உன்னை 
அதிகமாக நேசிக்குமே தவிர 
உன்னை விட்டு 
விலகி செல்லாது
உள்ளங்கள் இரண்டும் 
ஒன்று சேர்ந்தபின்.. 
அதை என்ன 
செய்தாலும் 
யாராலும் 
பிரிக்கவே முடியாது..
நம்மால் கூட 


உனக்கென்று 
நான் வரைந்த 
ஓவியம்..
அது நீயாகிப் 
போனாய் 
என்னுள் இருந்த 
நீயே அவன்..

சுற்றமும் சொல்லும்
என்னை வேண்டாம்
என்று..
நீ கேட்கவா
போகிறாய்..
என் பேச்சையே
கேட்கலையே..
உன்னைக் காண 
வந்தேன்
ஆவலாய்..
கண்டேன் உன் 
கவிதையை..
உன் கவிதையில் 
கண்டேன்..
உன் அன்பின் 
சுவாரசியங்கள்..



உன்னைக் கண்ட 
சந்தோஷம்
இன்னும் 
என்னுள்
தூரலாய்..
சாரலாய்..


என் 
கோபக் காளானை 
வீசி எறிந்தேன்.. 
நீ 
பேசியதும்..! 




இன்னும் 
என்ன தான் 
கோபம் உனக்கு 
என்மேல்..
அனலாய் சுடும் சூரியன்


ஆம்.. 
நீ என்னைக்
கண்ணே..
மணியே..
என்று
கொஞ்சதான் இல்லை
நீ தான் 
என்னுள் இருக்கும் 
கண்மணியே..
என்றாய்
என்னடா ஆச்சு உனக்கு
உம்மென்று இருக்கிறேன்
என்றென்னை 
உற்றுப் பார்த்துக் 
கொண்டேயிருக்கிறாய்..!
கவிதை என்று நம்பி
என் 
பினத்தல்களையும்
எழுதினாய்..
உன் 
பேனாவால்..
உன்னிடம் பேசினேன்
ஆஹா..! ஓஹோ..! 
கவிதை
என்றாய்..
என்னை விட்டு
நீ 
சாப்பிட்ட‌
முதல்
அசைவம்..!
உனக்கென்று 
செய்யும் சமையல் 
அது..
உனக்கானது மட்டுமே
மஸ்ரூம் பிரியாணி..!
எப்பொழுதும் எனக்கு 
5 ஸ்டார் சாக்லேட் 
வாங்கித் தந்த நீ..
இப்பொழுதெல்லாம் 
டெய்ரி மில்க், கிட்‍‍கேட்
வாங்கித் தருகிறாய்
என் சாக்கியன் நீ..
உன் வண்ணங்களைக்
கொண்டு செல்ல‌
துடிக்கும்
என்
பட்டாம்பூச்சி சிறகுகள்...
இறுகப் பிடித்துக் கொண்டேன்
உன்னை..
வேகமாய் சென்றதால்
எது காதலர் தினம்..?
வாழ்த்து சொல்வதும்
பரிசு பெற்றுக்
கொள்வதுமா..
உண்மை
அன்பு எதையும் 
எதிர்பார்க்காது..
அன்புக்குரியோர்
அருகில்
இருப்பதைத்
தவிர..
பட்டாம்பூச்சி சிறகுகள் 
தருவாய் எனக்கு
உன் வசப்பட..
எப்போது வருவாய்
என் 
அருகில்
உன்னை வரவுக்காய்
காத்திருக்கும்
இங்கு தான் 
வைத்திருக்கிறேன்
அத்தனை
பிரியத்தையும்..
இப்போதும்
நானே உன்
வரவுக்காக‌
காத்திருக்கிறேன்..
உள்ளங்கை ரேகை
தேயும் வரை
எழுதினேன் உன்
பெயரை..!
உனக்குப் பிடித்தவை தான் 
எனக்கும்
என்னை எனக்கு பிடிக்காது
அளவு சரியாக உள்ளது
என் காலுக்கு
நீ
வாங்கி வந்த செருப்பு..!
உன்னில் துளைக்கவா 
என் காற்றை 
வருடும் உன் விரலால்

Wednesday 13 February 2013


சொல்லறியா
பாசம்
சொல்லத்
தெரியாத நேசம்
உன் கண்கள்
சொன்னது
அத்தனையும்..


ஜூலியட்

கோபத்தில்
கிறுக்கிப் போட்டாய்
என் பெயரை..
உன் டைரியிலிருந்து
வருத்தம்
தெரிகிறது
உன் கவிதையில்..


ஜூலியட்

சொல்லும்
பனியும் ஒன்று..
சொல்லிய பின்
இருப்பதில்லை..


ஜூலியட்


சென்றேன்
தூரப் பயணம்..
தூரம் அதிகம் தான்
அதை விட அதிகம்
என் அன்பு..


ஜூலியட்

உன்னை விட‌
எப்போதுமே
நான் சற்று
கீழே தான்
உன் மீது
கொண்ட
கோபத்திலும்


ஜூலியட்

நீ எழுதிய
அனைத்தையும்
எனக்கென
எடுத்துக்
கொண்டேன்


ஜூலியட்

உன்னிடம் இருக்கும்
கெட்ட குணமே
என்னைத்
திருடியது தான்..


ஜூலியட்


வருகிறேன் என்று
சொல்லிச் சென்றாய்..
உன்னை விட்டுச்
செல்ல மனமின்றி
பின்வந்தேன் நான்..




ஜூலியட்


Tuesday 15 January 2013

உன் நினைவுடன் நான்



உனக்கும் எனக்கும் அப்படி என்ன‌ஆகி விட்டது..அளவிட முடியாஅன்பை பரிமாறிஆசையோடு பேசிய‌தருணங்களைமறந்து போக...இல்லை இல்லைஅப்படி ஒருஎண்ணமே வேண்டாமேஎப்போதும் உன்
நினைவுடன் நான்
நீயும் அப்படியே
இருப்பாய் என்று
நம்புகிறேன்






வெளிச்சத்தின் வார்த்தைகள்: ஒளிக் கற்றைகள்

வெளிச்சத்தின் வார்த்தைகள்: ஒளிக் கற்றைகள்




வீழ்ந்தன
என் மேல்
பனித்துளிகள்
ஒளிக்கற்றைகள்
விழுந்ததால்

Saturday 12 January 2013

யோசிக்கத் தோன்றுகிறது







நான் செய்யும் எதுவும் 
எனக்கே புரியவில்லை... 
என்ன செய்வதென்றே 
தோன்றவில்லை...
யோசிக்கத் தோன்றுகிறது
உன்னைப் பற்றியே...

ஆசை




என்னைப் பார்த்து 
சிரிக்கிறாள்
வாயின் தேன் 
ஒழுகும் வரை
அமிர்தம் பருகிடத் 
துடிக்கும்
ஆசை 
யாரை விட்டது          

அன்பின் அர்த்தங்கள்







கண்ணீர் மல்கி 
நிற்கிறேன்..
அன்பைப்
 பெற 
முயல்கிறேன்..


வீசிய 
வார்த்தைகள்
விதை
ஆகிப் போனதை
அறியாயோ...?

அன்பின் அர்த்தங்கள் 
சொல்லும் 
உன் பார்வைகள் 
ஆயிரம்..


அதை ஏன் 
மறைக்கிறாய்..
ஒத்துக் கொள்ள 
மறுக்கிறாய்..!



அலைபேசி, 

தொலைபேசி,

மின்னஞ்சல், 

வலைப்பதிவு



எங்கும்... 

தேடுகிறேன் உன் 
தகவல்களை...

சொதப்பல்







கவிதையில் சொன்ன 

உன் காதலை...
ஏற்றேன் பேர்வழி 
என்று நானும்...

கவிதை சொல்ல
முற்பட்டு... 
சொதப்பலுடன்
சொன்னேன் 
என் காதலை...!

அன்பாய்...





குயவன் அன்பு செலுத்தும் 
களிமண்
அவன் அன்புக்கு கட்டுப்படும்
பாத்திரமாய்... 

தச்சன் அன்பு செலுத்தும் 
மரக்கட்டை
அவன் அன்புக்கு கட்டுப்படும்
சாமானாய்...

கணவன் அன்பு செலுத்தும் 
மனைவி
அவன் அன்புக்கு கட்டுப்படும்
அன்பாய்...

என்னவனுக்கு சமர்ப்பணம்

கவிதை உள்ளம் 
கொண்ட கவியரசே 
கற்பனை நயம் 
கொண்ட கலையே 

ஒரு சொல் 
பொருள் தரும்
உன் கவிதை

கற்பனை அல்ல - நிஜம் 
உனது கற்பனை


கவி சொல்லும்
கலையை உன்
வார்த்தைகள் 


சொல்லும்
கவியாய்


வேறொன்று

எண்ணம் ஒன்று
செயல் ஒன்று
பார்வை ஒன்று

அன்பு ஒன்று
உள்ளம் ஒன்று
உணர்வு ஒன்று

நீ ஒன்று
நான் ஒன்று

நாம் ஒன்று

எல்லாம் ஒன்றாகிப் 


போனப் பின்
நாம் வேறாக 

வாய்ப்பே இல்லை



கவிதை எங்கே..?


எனக்கு மட்டுமே 

சொந்தமான‌
உன் கவிதைகள்
எங்கே...?